/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் மேம்பாட்டு பணி ரயில்வே ஜி.எம்., ஆய்வு
/
ஈரோட்டில் மேம்பாட்டு பணி ரயில்வே ஜி.எம்., ஆய்வு
ADDED : நவ 20, 2025 02:22 AM
ஈரோடு, நஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ரூ.35 கோடி மதிப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் பயணிகள் அமர்வதற்கான இடம் விரிவாக்கம், விரிவாக்கப்பட்ட வாகன பார்க்கிங் வசதி, நடை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள், 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சிறப்பு ரயில் மூலம் தென்னக
ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அவரை ரயில்வே அலுவலர்கள், எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் வரவேற்றனர். பின்னர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதிக்கு சென்று, மேம்பாட்டு பணிகள் குறித்த வரைபடங்களை பார்த்தார். இப்பணிகள் குறித்து ரயில்வே அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால் உடனிருந்தார்.

