ADDED : மார் 22, 2026 07:14 AM
ஈரோடு:சாலை
மார்க்கமாக மட்டுமின்றி, ரயில்கள் மூலமும் அரசியல் கட்சியினர்,
கட்சி பிரமுகர்கள் பரிசு பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு
இடத்துக்கு அனுப்பி வைக்க கூடும் என்-பதால், ரயில்வே பார்சல்
அலுவலகங்கள், ரயில்களில் செல்லும் பயணிகளின் உடமைகளையும் சோதனை
செய்து கண்காணிக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி
ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபற்றி ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி கூறியதாவது:
ரயில்களில் வரும் பார்சல்கள் சந்தேகப்படும்படியாக இருந்தால் அதை உடனடியாக பிரித்து, யார் அனுப்பி-யது, எங்கு செல்கிறது என தெரிந்து,
சம்பந்தப்பட்ட
நபரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்து-கிறோம். ஓடும் ரயில்களில்
ரயில்வே பாதுகாப்பு படையினர், மப்டி போலீசார் பயணிகளை
கண்காணிக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அவர்களது உடமைகளை
தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். ஈரோட்டில் இருந்து ரயில்களில்
ஏற்றப்-படும் பார்சல்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
