/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சம்பள கமிஷன் அறிவிப்பு வெளியிட ரயில்வே ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
/
சம்பள கமிஷன் அறிவிப்பு வெளியிட ரயில்வே ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
சம்பள கமிஷன் அறிவிப்பு வெளியிட ரயில்வே ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
சம்பள கமிஷன் அறிவிப்பு வெளியிட ரயில்வே ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2024 02:27 AM
ஈரோடு: ஈரோட்டில், தென்னக ரயில்வே ஓய்வூதியர் நலச்சங்க பொது மகா-சபை கூட்டம் தலைவர் உதய குமார் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் வெங்கடா-சலம், செயல் பொதுச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் இளங்கோ, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பன்-னீர்செல்வம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், 8 வது சம்பள கமிஷன் பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ஒதுக்கிவிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமலாக்க உள்ளது. இவை நமக்கு தேவையில்லை. பழைய
பென்ஷன் திட்டத்தையே அமலாக்க வேண்டும். நிலு-வையில் உள்ள, 18 மாத டீ.ஆர்., நிலுவையை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்க
வேண்டும். தமிழக அரசு போல ஓய்வூதியர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு இறப்பு, ஈமச்சடங்கு நிதி வழங்க வேண்டும்.ரயில்வே மருத்துவமனையில், பென்ஷனர்களுக்கு தனியாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும். உரிய காலத்தில் மெடிக்கல் கிளைம்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு
தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

