/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
45 மொபைல் போன் திருட்டு ரயில்வே போலீசார் வழக்கு
/
45 மொபைல் போன் திருட்டு ரயில்வே போலீசார் வழக்கு
ADDED : ஜன 02, 2025 01:24 AM
ஈரோடு, ஜன. 2-
ஈரோடு ரயில்வே போலீசார் கூறியதாவது: கடந்தாண்டு, ரயில் பயணத்தின் போது மொபைல்போன் திருட்டு போனதாக நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் ரயில் பயணிகள் அளித்த புகார்படி, 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 24 வழக்குகளில் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
கடந்தாண்டு, 84 ஆண், 14 பெண் என மொத்தம் 98 பேர் ரயிலில் விழுந்து தற்கொலை, ரயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். இதில் 71 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. 27 பேர் அடையாளம் காணப்படவில்லை. கடந்தாண்டு முழுவதும், ரயிலில் மூன்று நகை பறிப்பு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு நகை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயிலில், பெண் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அசாம் வாலிபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கூறினர்.

