/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் களை கட்டியது ரயில்வே தொழிற்சங்க தேர்தல்
/
ஈரோட்டில் களை கட்டியது ரயில்வே தொழிற்சங்க தேர்தல்
ADDED : டிச 05, 2024 08:02 AM
ஈரோடு: ஈரோட்டில், ரயில்வே தொழிற்சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு களை கட்டியது. நான்கு இடங்களில் ஓட்டுப்பதிவு துவங்கியது.
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளை, தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. ஈரோடு டீசல் லோகோ ஷெட்டில், 603, எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட்டில் 593, பழைய ரயில் திருமண மண்டபத்தில், 867, ரயில்வே இன்ஸ்டிடியூட்டில், 848 பேர் ஓட்டு போட தகுதி பெற்ற-வர்கள். இந்த நான்கு
இடங்களில், ஓட்டு பெட்டி வைக்கப்பட்-டுள்ளது.தேர்தலால், நான்கு இடங்களிலும் களை கட்டியுள்ளது. ஓட்டு-ரிமை பெற்ற தொழிலாளர்கள் அனைவரும் ஓட்டு
போட்டு, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரு-கின்றன. அமைதியான முறையில் தேர்தல்
நடக்க, ரயில்வே போலீசார், சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்-டுள்ளனர்.