ADDED : அக் 23, 2024 01:25 AM
மழையால் சேதமாகும்
'மேன் ஹோல்கள்'
ஈரோடு, அக். 23-
ஈரோடு மாநகரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பாதாள சாக்கடை அமைப்பில் உள்ள மேன் ஹோல்கள் அரிக்கப்பட்டு, சேதமாகி வருகின்றன.
குறிப்பாக, ஈரோடு-கரூர் சாலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேன் ஹோல்களின் பக்கவாட்டு பகுதி அரிக்கப்பட்டு சேதமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே பக்கவாட்டு பகுதியில் சரிவர சிமென்ட் பூச்சு செய்யப்படாததால், அவ்வப்போது கழிவுநீர் வெளியேறும் நிலையில், தற்போதைய தொடர் மழையால், மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், மேன் ஹோல்களை சுற்றி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
எனவே மெத்தனம் காட்டாமல், கரூர் சாலையில் மேன் ஹோல்களை சுற்றி, தரமான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அதை சுற்றியுள்ள பள்ளத்தை தார் கொண்டு மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
