ADDED : செப் 07, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை, 5:௦௦ மணிவரை கடும் வெயில் சுட்டெரித்து.
இந்நிலையில், 5:௦௦ மணிக்கு மேல் வானம் இருண்டு, மழை பெய்ய தொடங்கியது. 40 நிமிடம் அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மானாவாரி சாகுபடிக்கு இந்த மழை கை கொடுக்கும் என்றும், நம்பிக்கை தெரிவித்தனர்.