தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்மாபேட்டை, அந்தியூரில் மழை

அம்மாபேட்டை, அந்தியூரில் மழை

அம்மாபேட்டை, அந்தியூரில் மழை


ADDED : செப் 13, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூதப்பாடி, சிங்கம்பேட்டை, பூனாட்சி, ஊமாரெட்டியூர் பகுதிகளில், நேற்று மாலை, 4:30 மணிக்கு தொடங்கிய மழை, 5:30 மணி வரை பெய்தது.

மழையால் அம்மாபேட்டை-அந்தியூர் சாலை அண்ணாநகரில் சாலையோர வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணிநேரம் பேராாடி மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* பர்கூர் மலை மற்றும் ஊசிமலை, துருஷ்ணாம்பாளையம், தட்டக்கரை, தாமரைக்கரை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை, ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் பெய்தது.

இதேபோல் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், மந்தை, வட்டக்காடு, பிரம்மதேசம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில், மாலை, 5:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us