ADDED : மே 03, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலுள்ள, பர்கூர், தாமரைக்கரை, துருசனாம்பாளையம், பெஜ்ஜில்பாளையம், தட்டகரை உள்ளிட்ட இடங்களில், நேற்று மதியம் 3:00 மணிக்கு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.
இதேபோல், அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, புதுமேட்டூர் உட்பட பல இடங்களில், 20 நிமிடம் காற்றுடன் கூடிய லேசான மழை பொழிந்தது.