sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் வெகு நாளைக்கு பின் குளிர்ந்த காற்றுடன் மழை

/

மாவட்டத்தில் வெகு நாளைக்கு பின் குளிர்ந்த காற்றுடன் மழை

மாவட்டத்தில் வெகு நாளைக்கு பின் குளிர்ந்த காற்றுடன் மழை

மாவட்டத்தில் வெகு நாளைக்கு பின் குளிர்ந்த காற்றுடன் மழை


ADDED : மே 07, 2025 01:33 AM

Google News

ADDED : மே 07, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களாக கடும் வெயில் வாட்டியதுடன், பல நாட்கள், 100 டிகிரியை கடந்தது. நேற்று காலை, 7:00 மணி முதல் கடுமையான வெயில் வாட்டினாலும் மதியம், 1:00 மணிக்கு மேல், மேகமூட்டம் காணப்பட்டதால் வெப்பம் குறைந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல் வெயில் மறைந்து மேகமூட்டமும், லேசான மின்னல், இடியும், துாறல் மழையும் தென்பட்டது. ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று, 99.2 டிகிரி வெயில் அடித்தது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 0.5 முதல், 2.8 டிகிரி வெயில் கூடுதலாக தென்பட்டது.

* கோபி டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் அக்னி வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து நேற்று மாலை 4:00 மணிக்கு கோபி பஸ் ஸ்டாண்டு, புதுப்பாளையம், மொடச்சூர் சாலை, கரட்டூர்,

குள்ளம்பாளையம் உள்ளிட்ட

பகுதியில், லேசான துாறல் மழை பெய்தது. பத்து நிமிடம் மட்டுமே பெய்த லேசான துாறல் மழைக்கு பின், இரவு முழுக்க வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

----------* டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம் பாளையம், புஞ்சை துறையம் பாளையம், சின்ன காளியூர், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வழக்கம்போல வெயில் வாட்டி வந்த நிலையில் மதியம், 2:30 முதல் 3:00 மணி வரை சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், கணக்கம்பாளையத்தில் உள்ள புளியமரம் வேரோடு சாய்ந்து தோட்டத்திற்குள் விழுந்தது. மேலும், மெயின் ரோட்டில் புளியமரம் முறிந்து விழுந்தது. இதில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கணக்கம்பாளையத்திற்கு பஸ்கள் வர முடியாமல் போனதால், பிரிவிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

* சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் அக்னி வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் மதியம், 2:00 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை நீடித்தது.

மழையுடன் பலத்த காற்று வீசியதால், சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான தை தேரின் கொட்டகையின் மேல் தகடு, சூறாவளி காற்றில் பறந்தது. பின்னர், தேர் பணிகளை செய்து வரும் ஆசாரியார் சோமு விரைந்து வந்து தேர் கொட்டகையை சரி செய்தார்.

* பெருந்துறையில் நேற்று பிற்பகல், 3.30 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, 45 நிமிடம் நீடித்தது. சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால், மாலையிலும், இரவிலும் குளிர்ச்சியான காற்று வீசியது.

* அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள சங்கராப்பாளையம், மந்தை, ஜிஎஸ் காலனி, மைக்கேல்

பாளையம், வரட்டுப்பள்ளம் செக் போஸ்ட், குரும்பபாளையம் மேடு, செலம்பூரம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், நேற்று மாலை, 3:00 மணியளவில், 20 நிமிடத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.

இதேபோல், வெள்ளித்

திருப்பூர், மாத்துார் ஆகிய இடங்களிலும், பர்கூர் மலைப் பகுதியில் பெஜ்ஜில்பாளையத்தில் லேசான துாறல் மழை பெய்தது.

* பர்கூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தாமரைக்கரை அருகே ஈரட்டியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்தது. கடந்த, 2ல், இடியுடன் கூடிய கனமழை பெய்தபோது, இடி தாக்கி ஈரட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் சேதமானது. இதன் காரணமாக, போர்வெல்லுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின் துண்டிப்பால், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டும் நடவடிக்கை இல்லை என கூறும் பொதுமக்கள், விரைவில் டிரான்ஸ்பார்மரை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us