ADDED : அக் 07, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலையில் நேற்றும் காலை முதலே கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் மாலை, 5:40 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு, 6:௦௦ மணியளவில் பலத்த காற்றுடன் மழை கொட்ட தொடங்கியது. ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக சென்னிமலை-அரச்சலுார் ரோட்டில் மழை வெள்ளம் பாய்ந்தோடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பல இடங்களில் மர கிளை முறிந்து விழுந்தது. கனமழை நின்ற பிறகும் நீண்ட நேரம் துாரல் மழை தொடர்ந்தது.