ADDED : அக் 13, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயத்தில்
நேற்று முன்தினம் மாலை, 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. சில
வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக சீரமைக்கப்படாததால்,
மழைநீர் வழிந்தோட முடியாமல், பல வீடுகளை சூழ்ந்து சிறு தீவு
போலாக்கியது. குடியிருப்புகளை கழிவுநீருடன் சூழ்ந்த மழை நீரால்
மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சில வீடுகளுக்கும் கழிவுநீர் புகுந்தது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்