ADDED : ஆக 21, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை;ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளை கொண்டாடினர். சென்னிமலை ஸ்ரீராஜிவ் காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், ராஜிவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பெருந்துறையில், நசீர் முன்னிலையில் ராஜிவ் படத்துக்கு மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை தலைவர் நடராஜ், வட்டார தலைவர் ராவுத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

