/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராமானுஜர் அவதார தினம்: 11 கருட சேவை
/
ராமானுஜர் அவதார தினம்: 11 கருட சேவை
ADDED : மே 02, 2025 01:57 AM
அந்தியூர்:
ராமானுஜர் 1008வது அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூரில் கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து, மைலம்பாடி சுதர்சன மட ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ ரங்க பராங்குச பரகால நம்பி ராமனுஜ ஜீயர் தலைமையில், கருட சேவை நடந்தது.
அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், பேட்டை பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள், 11 கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்றிரவு 7 மணிக்கு துவங்கிய கருட சேவை ஊர்வலத்தில், ராமானுஜர் முன்னால் செல்ல, 11 பெருமாள் சுவாமிகளும் பின்தொடர்ந்து, சத்தி ரோடு, சிங்கார வீதி, தேர்வீதி, பர்கூர் ரோடு வழியாக, அழகுராஜ பெருமாள் கோவிலை சென்றடைந்தது.

