ADDED : டிச 23, 2024 09:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு கோட்டை பகுதி தெப்பக்குளம் முன்புறம் உள்ள அவரது சிலைக்கு, ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் சத்திவேல், செயலாளர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ராமானுஜம் பெயரில் பல்கலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பத் நகரில் உள்ள டிஜிடல் நுாலகத்துக்கு ராமானுஜம் பெயரை சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
