/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ் உடன்பாடு
/
பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ் உடன்பாடு
ADDED : மார் 30, 2024 02:14 AM
ஈரோடு:ஈரோடு
பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் பெரும்பாலும்
இஸ்லாமியர்களாக இருப்பதால், ரம்ஜான் பண்டிகைக்கு போனஸ்
வழங்குவது வழக்கம்.இதன்படி, 2023-24ம் ஆண்டுக்கான ரம்ஜான்
பண்டிகை போனஸ், இதர பொது கோரிக்கைகள் தொடர்பாக, ஏ.ஐ.டி.யு.சி.,
கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கத்துக்கும், ஈரோடு
வி.பி.ஆர்.காலேஜ் பீடி கம்பெனி நிர்வாகத்துக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.
இவ்வாண்டுக்கான
போனஸாக, 1,000 பீடிகளுக்கு, 32 ரூபாய் வீதம் வழங்க உடன்பாடானது.
இது கடந்தாண்டு வழங்கப்பட்டதைவிட, 2 ரூபாய் கூடுதலாகும். தொகையை
இன்று முதல் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்பு கொண்டனர்.தகுதியான
அனைத்து தொழிலாளர்களையும், பி.எப்., - ஈ.எஸ்.ஐ., திட்டத்தில்
உறுப்பினராக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி
குறைந்த பட்சம், 1,000 பீடி சுற்ற தேவையான இலை, துாள் வழங்க
வேண்டும்.
சென்னை
தொழிலாளர் துறை ஆணையர் அறிவித்தபடி, ஏப்., 1 முதல், 1,000
பீடிகளுக்கு, 15 ரூபாய் வீதம் பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என
சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக,
நிர்வாக தரப்பில் ஒப்பு கொண்டனர்.

