தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பீடி சுற்றும் தொழிலாளருக்கு ரம்ஜான் போனஸ் அறிவிப்பு

பீடி சுற்றும் தொழிலாளருக்கு ரம்ஜான் போனஸ் அறிவிப்பு

பீடி சுற்றும் தொழிலாளருக்கு ரம்ஜான் போனஸ் அறிவிப்பு


ADDED : மார் 08, 2026 07:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு வி.பி.ஆர்., காலேஜ் பீடி கம்பெனிக்கும், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்துக்கும் நடந்த பேச்சுவார்த்தையில், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கான ரம்ஜான் போனஸ் உடன்படிக்கையா-னது.

வரும், 21ல் ரம்ஜான் பண்டிகை கொண்ட உள்ளனர். முன்னதாக ஏ.ஐ.டி.யு.சி., கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு வி.பி.ஆர்., கம்பெனி நிர்வாகத்துடன் போனஸ் இதர கோரிக்கை பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த, 2025-26ம் ஆண்டுக்கான போனஸாக அனைத்து பீடி சுற்றும் தொழிலாளர்க-ளுக்கும், 1,000 பீடிகளுக்கு, 37 ரூபாய் வீதம் கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

இத்தொகையை ஓரிரு நாளில் வழங்குவது. இது கடந்தாண்டை-விட, 1,000 பீடிகளுக்கு, 3 ரூபாய் கூடுதலாகும். அனைத்து தொழிலாளர்களுக்கும் தினமும் குறைந்தபட்சம், 1,000 பீடிகள் சுற்றுவதற்கு தேவையான இலை, துாள் வழங்க கோரிக்கை முன்வைத்து ஏற்கப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர் பயன் பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us