sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண்ணிடம் அத்துமீறல்: போலீசாரை தாக்க முயற்சித்த கான்ஸ்டபிள் கைது

/

பெண்ணிடம் அத்துமீறல்: போலீசாரை தாக்க முயற்சித்த கான்ஸ்டபிள் கைது

பெண்ணிடம் அத்துமீறல்: போலீசாரை தாக்க முயற்சித்த கான்ஸ்டபிள் கைது

பெண்ணிடம் அத்துமீறல்: போலீசாரை தாக்க முயற்சித்த கான்ஸ்டபிள் கைது


ADDED : நவ 08, 2024 02:49 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:ஈரோடு அருகே வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறியதுடன், போலீசாரை தாக்க முயன்ற, போலீஸ் கான்ஸ்டபிளை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், தங்கம் நகரை சேர்ந்தவர் ராணி, 27; அத்தாணி, சவுண்டப்பூரை சேர்ந்தவர் கார்த்தி, 38; பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிகிறார். ஆனால், ஒன்றரை ஆண்டாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் (விட்டோடி) உள்ளார். இவருக்கும் ராணிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கருத்து வேறுபாட்டால் இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கான்ஸ்டபிள் கார்த்திக், குடிபோதையில் ராணி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராணி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டவர், நேற்று காலை மீண்டும் சென்று போதையில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு, ராணி தகவல் தெரிவித்தார்.

அங்கு சென்ற போலீசார், கார்த்திக்கை பிடிக்க முயன்றபோது, அவர்களையும் தகாத வார்த்தை பேசி மிரட்டியுள்ளார். இதனால் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தை பேசியது, பெண்ணிடம் பாலியல் துன்புறத்தலில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர். பவானி கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us