/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
/
கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
ADDED : நவ 19, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆக., மாதம் நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில், 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று முதல், 1,800 கன அடியாக குறைக்கப்பட்டது. அரக்கன்கோட்டை - தடப்பள்ளி பாசனத்துக்கு, 500 கன அடி நீர்; குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்வரத்து, 3,672 கன அடியாக இருந்தது. நீர்மட்டம், 102.64 அடி; நீர் இருப்பு, 30.8 டி.எம்.சி.,யாக இருந்தது.

