/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
/
மாவட்ட போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி துவக்கம்
ADDED : பிப் 03, 2026 07:19 AM
ஈரோடு: தமிழ்நாடு காவல் துறை சார்பில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், மக்களை நேரடியாக சந்திக்கும் போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி அளித்து, திறன்களை மேம்படுத்தி, சட்ட அறிவை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் நிலை காவலர் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான போலீசாருக்கு, ஆறு நாள் புத்தாக்க பயிற்சி முகாம், எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நேற்று தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தங்கவேல், பயிற்சி அளித்தார். இதில், 50 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று துவங்கிய பயிற்சி, 7ம் தேதி நிறைவு பெறுகிறது. வரும், 9ல் அடுத்த கட்டமாக, 50 போலீசாருக்கு ஆறு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

