ADDED : செப் 06, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில், 436 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி முகாம் ஈரோட்டில் நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் துவங்கி வைத்தார். டெங்கு
காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு, தடுக்கும் முறை, டெங்கு ஏற்படுத்தும்
கொசு, ஏடிஸ் கொசு புழு உற்பத்தி, இதனை அழிக்கும் முறை, கண்டறியும் முறை,
புகை மருந்து அடித்தல் குறித்து மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் பயிற்சி
அளித்தார். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி,
பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 24 புகை பரப்பும் இயந்திரங்கள், 2
வாகன புகை பரப்பும் இயந்திரங்களை கமிஷனர் அர்பித் ஜெயின்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
