வனப்பகுதி சாலையில் வீசிய பிளாஸ்டிக் பொருள் அகற்றம்
வனப்பகுதி சாலையில் வீசிய பிளாஸ்டிக் பொருள் அகற்றம்
ADDED : அக் 04, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:வன
உயிரின வார விழாவை முன்னிட்டு, அந்தியூர் வனசரகத்தில் சாலையின்
இருபுறங்களிலும், பிளாஸ்டிக் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை
அகற்றும் பணி நடந்தது.
அந்தியூர் ரேஞ்சர் நந்தினி
தலைமையில், வரட்டுப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பர்கூர் சாலையில்,
வனச்சரக களப்பணியாளர், தனியார் அறக்கட்டளையினர்,
தன்னார்வலர்கள் மற்றும் தனியார் கல்லுாரி மாணவியர் இணைந்து, 5 கி.மீ.,
தொலைவில், 600 கிலோ எடையில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் மற்றும்
குப்பைகளை அகற்றினர். பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர்
ஈடுபட்டனர்.
