/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது
/
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது
ADDED : நவ 13, 2024 03:08 AM
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சியில் முக்கிய சாலைகளில், வாகன போக்குவரத்து
அதிகரித்துள்ள நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற,
மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி மாநகராட்சி பிரதான
சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
வரும், ௧௫ம் தேதி வரை இந்தப்பணி தொடரும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரின் முக்கிய வர்த்தக ஸ்தலமான
பன்னீர்செல்வம் பார்க் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரை, சாலையை
ஆக்கிரமித்திருந்த அனைத்தும் அகற்றப்பட்டது. இதையொட்டி போலீசார்
பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இன்று ப.செ.பூங்கா பகுதியில் இருந்து, மீனாட்சி சுந்தரனார்
சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை, மேட்டூர் ரோட்டில் பஸ்
ஸ்டாண்ட் அருகில் சத்தி சாலை ரவுண்டானா வரையிலும் ஆக்கிரமிப்பு
அகற்றப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

