ADDED : ஆக 27, 2026 03:27 AM
அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் தேர்த் திரு-விழா, கடந்த, 12ல் துவங்கி, 16-ம் தேதி வரை நடந்தது.
திருவிழாவுக்காக, வெள்ளைப்பிள்ளையார் கோவில் முதல் கிருஷ்ணாபுரம் வரை, பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்-பட்டன. திருவிழா முடிந்த நிலையில், புதுப்பாளையம், தண்ணீர்-பந்தல் பகுதியில், தேங்காய் மிட்டாய், கொள்ளேகால் பர்பி, அல்வா, முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டன. தின்பண்டங்கள் தயார் செய்து 15 நாட்களுக்கும் மேல் ஆனதால், அனைத்தும் காலாவதி ஆகியிருக்கும். இதை சாப்பிடுபவர்கள் உடல் நலம் பாதிக்கப்ப-டுவர். இதுகுறித்து நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை-யடுத்து, அந்தியூர் யூனியன் நிர்வாகம் கடைகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. நேற்று முன்தினம் காலை சாலை ஓரத்தில் போடப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
