ஈரோடு கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் பிரபல இருதய நோய் நிபுணர் அறிமுக விழா
ஈரோடு கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் பிரபல இருதய நோய் நிபுணர் அறிமுக விழா
ADDED : ஏப் 11, 2026 05:57 AM
ஈரோடு; கோவையில் இருந்து ஈரோடு கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள, இருதய நோய் நிபுணரான டாக்டர் மோகன் அறிமுக விழா நடந்தது. கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, மோகனை அறிமுகப்படுத்-தினார். இவருடன் கே.எம்.சி.ஹெச்., இருதய-வியல் துறையை வலுப்படுத்தும் வகையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ராகவேந்திரன், நாளமில்லா சுரப்பியல் நிபுணர்களான அனிதா, மகளிர் நல மருத்துவர் காயத்ரி பெரியசாமி-யையும் அறிமுகம் செய்து வைத்தார்.
டாக்டர் நல்லா.ஜி.பழனிசாமி நிருபர்களிடம் பேசியதா-வது:ஈரோட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த இருதய சிகிச்சை தற்போது கிடைக்கிறது. சென்னை, பெங்களூருக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. இங்கு பல நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன. இதுவரை, 21 ஆயிரம் ஆஞ்சியோகிராம், 11 ஆயிரம் ஆஞ்சியோ பிளாஸ்டி, 1,200 பேஸ்-மேக்கர் மற்றும் 3,000 இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ள ப்பட்டுள்ளன. டாக்டர் மோகன் மட்டும் கோவை கே.எம்.சி.ஹெச்.,-ல் தனியாக, 10 ஆயிரம் ஆஞ்சி-யோகிராம், 5,000 ஆஞ்சியோ பிளாஸ்டி, ஆயிரத்-துக்கும் மேற்பட்ட ஓ.சி.டி.,/ஐ.வி.யு.எஸ்., பரிசோ-தனை மற்றும் 250 ரொட்டாபிளேஷன் மற்றும் ஆர்பிட்டல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இங்கு உடல் பருமன் குறைப்பு சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
