ADDED : மார் 13, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி நகராட்சிக்கு சொந்தமான நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள், குத்தகை அடிப்படையில், வாடகைக்கு விடப்பட்டுள்-ளது.
இந்த வகையில் கோபி வணிக வளாகத்தில் நான்கு கடைகள், பழைய லாரி ஸ்டாண்ட் பகுதியில் மூன்று கடைகள், தினசரி மார்க்கெட் பகுதியில் இரு கடைகள் என ஒன்பது கடைகளுக்கு, கடைக்காரர்கள் முறையாக வாடகை செலுத்தவில்லை. நகராட்சி உரிய அவகாசம் கொடுத்தும் செலுத்தாததால், நகராட்சி ஊழியர்கள் ஒன்பது கடைகளையும் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.
