/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டுகோள்
/
மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டுகோள்
மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டுகோள்
மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டுகோள்
ADDED : செப் 19, 2024 08:02 AM
ஈரோடு: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலருக்கு, ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க அரசாணை
வெளியிடப்பட்டது. அதனை திருத்தி அமைக்க முத்தரப்பு குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த அரசாணையில் அரசு மருத்துவமனைகள், ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் நீங்கலாக என குறிப்பிட்டிருப்பது
ஏற்புடையதல்ல.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஈ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தம், அவுட் சோர்சிங் முறையில் தொழிலாளர்கள்
பணி செய்கின்றனர். கடந்த முறை மருத்துவமனை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட, இவர்கள் குறைவாகவே ஊதியம் பெற்றாலும், அரசாணையில் இவர்கள் நீங்கலாக என,
குறிப்பிட்டுள்ளதால் முறையிட இயலவில்லை.அவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து நிலை மருத்துவ பணியாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம், 30 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

