/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்
/
நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 29, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு வனக்கோட்ட, மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: ஈரோடு வனக்கோட்டம் அந்தியூர் வனச்சரகத்தில், வன உயிரின குற்ற வழக்கில் கைதான, அந்தியூர், மைக்கேல்பாளையம், மந்தை ஜி.எஸ்.காலனி முருகேசன் மீது வன உயிரினங்களை வேட்டையாட முயன்றது போன்ற வழக்கு உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.
வன உயிரினங்களை வேட்டையாட சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகளை சம்மந்தப்பட்ட நபர்கள், தாமாக முன்வந்து சம்மந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.