/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழைக்கால உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை
/
மழைக்கால உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை
ADDED : நவ 11, 2025 02:08 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட குலாலர் சங்க கல்வி பரிசளிப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
மண்பாண்ட தொழிலாளர் தொழிலை காக்கும் நோக்கில், பொங்கல் விழாவின்போது அரசு வழங்கும் இலவச அரிசி, கரும்பு, சர்க்கரை, வேட்டி, சேலையுடன் புதிய மண் அடுப்பு, பானை வழங்க வேண்டும். பருவமழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கும், 5,000 ரூபாய் உதவித்தொகையை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மண் பாண்ட தொழில் செய்யும் இடத்துக்கும், தொழிலாளர்களின் வீட்டுக்கும் அடிமனை பட்டா வழங்க வேண்டும். மண் பாண்டங்களின் பயன்பாடு, நலன் குறித்து பள்ளி பாடப்புத்தகங்களில் பாடப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

