/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க கோரிக்கை
/
அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகே, கடந்த, 11ம் தேதி வேளாண் கண்காட்சி நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி அவர் செல்லும் பாதையில் உள்ள வேகத்தடைகளை அகற்றினர்.
பெருந்துறை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அண்ணாசிலை ஆகிய இடங்களில் வேகத்தடையை இடித்து அகற்றி சமன் செய்தனர். ஆனால் மீண்டும் வேகத்தடை அமைக்காததால், விபத்து அச்சம் அதிகரித்துள்ளதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். மெத்த-னத்தை மேலும் தொடராமல், நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் வேகத்தடையை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.