/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆபத்தான மேல்நிலை தொட்டியை அகற்ற கோரிக்கை
/
ஆபத்தான மேல்நிலை தொட்டியை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 01:10 AM
அந்தியூர், அந்தியூர் அடுத்த வெள்ளித்
திருப்பூர் அருகே, ஆலாம்பாளையம் தெற்கு தெரு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. குடியிருப்புக்கு மிக அருகாமையில் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
நீண்ட காலமானதால், தொட்டியின் மூன்று துாண்களின் மேல் பூசப்பட்ட சிமென்ட் கலவை பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும், தொட்டி உள் பகுதியிலும் கலவை பெயர்ந்துள்ளது. பழுதடைந்துள்ள தொட்டி அருகில், கோவில் மற்றும் வீடுகள் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொட்டியை இடித்து அகற்றி, வேறு இடத்தில் புதிய தொட்டி கட்டி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.