/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் அரசு ஆண்கள் பள்ளியில்சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
/
அந்தியூர் அரசு ஆண்கள் பள்ளியில்சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
அந்தியூர் அரசு ஆண்கள் பள்ளியில்சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
அந்தியூர் அரசு ஆண்கள் பள்ளியில்சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம், எட்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நாள்தோறும் காலை, மாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் நடைபயிற்சி செய்கின்றனர்.
கால்பந்து, கிரிக்கெட், கபடி பயிற்சியில் விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகின்றனர். மைதான சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்துள்ளது. இந்த வழியாக மைதானத்துக்குள் இரவில் நுழையும் குடிமகன்கள், மது குடித்து கும்மாளமிடுகின்றனர்.
பாட்டில்களை வீசி செல்கின்றனர். இடிந்த மற்றும் குடிமகன்களால் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை சீரமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது.