/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சியில் 116 தீர்மானம் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சியில் 116 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : மார் 10, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரிய
பிரகாஷ் தலைமை வகித்தார்.
கமிஷனர் பால்ராஜ், துணைத்த-லைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை மற்றும் நகராட்சி இரவு நேர காவலர் நியமனம், சுகா-தார பிரிவு பயன்படும் வாகன செலவு, நகராட்சி பராமரிப்பில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை துாய்மை பணிக்கு தனியார் ஒப்-பந்தம் என்பது உள்பட, 116 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, கூட்ட நிறைவில் பெண் கவுன்சிலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

