/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி நகராட்சியில் 32 தீர்மானம் நிறைவேற்றம்
/
பவானி நகராட்சியில் 32 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
பவானி : பவானி நகராட்சி அலுவலக கூட்டரங்கில், சாதாரண மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். கமிஷனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியவுடன், முதலாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வடிவேல், தனது வார்டில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு சரி செய்யாமல் இருக்கிறது என்று கூறி, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி, வெளிநடப்பு செய்தார். நான்காவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கார்த்தி, எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணியம், 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவி ஆகியோர், தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்னையை தெரிவித்தனர். தலைவர் மற்றும் கமிஷனர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். கூட்டத்தில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.