/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தர்காவுக்கு பாதுகாப்பு குழு அமைக்க தீர்மானம்
/
தர்காவுக்கு பாதுகாப்பு குழு அமைக்க தீர்மானம்
ADDED : ஆக 02, 2025 01:31 AM
ஈரோடு, ஈரோடு வ.உ.சி., பூங்காவில், 400 ஆண்டு பழமையான ஹஜ்ரத் பசல்ஷா காதிரி மற்றும் ஜெச்சாபீபி அவ்லியாக்கள் தர்காவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தர்காவின் பரம்பரை முஜாவரியான ஜனாபா சமீம் தலைமை வகித்தார்.
தர்காவின் தினசரி வழிபாடு தடையின்றி நடக்க, ஒரு பாதுகாப்பு குழு அமைப்பது, அதன் பராமரிப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. தர்காவுக்கு வரும் பெண் பக்தர்களின் வசதிக்காக, வளாகத்துக்குள் கழிப்பறை கட்ட, மாநகராட்சி என்.ஓ.சி., வழங்க வேண்டும். அனைத்து பக்தர்களையும் இணைத்து பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். இக்கோரிக்கைகளை மனுவாக மாநகராட்சி மேயர், ஆணையரிடம் தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.