ADDED : நவ 06, 2024 01:49 AM
100% வாடகை உயர்வு
மறுபரிசீலனை
செய்ய தீர்மானம்
பெருந்துறை, நவ. 6-
பெருந்துறை பேரூராட்சி நிர்வாகத்தில் உள்ள, பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட்-டில் சுங்க கட்டணமும், கடைகளின் வாடகை, 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க, வியாபாரிகள்- மற்றும் விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்,- மார்க்கெட் வளாகத்தில் நேற்று நடந்தது.
தினசரி மார்க்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி பேசினார். மார்க்கெட்-டுக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளின் வாகனங்களுக்கு மட்டுமின்றி, பொருட்களை வாங்கி செல்லும் வியாபாரிகளின் வாகனங்களுக்கும் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏதாவது ஒன்றுக்கு மட்டும் நியாயமான சுங்கம் வசூலிக்க வேண்டும். 100 சதவீதம் உயர்த்தப்பட்ட மார்க்கெட் கடைகளின் வாடகையை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரனை சந்தித்து, கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.
