பள்ளிகளுக்கு வந்தடைந்த உடற்கல்வி வகுப்புகளுக்கான வளநுால் புத்தகம்
பள்ளிகளுக்கு வந்தடைந்த உடற்கல்வி வகுப்புகளுக்கான வளநுால் புத்தகம்
ADDED : செப் 17, 2026 06:26 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வரை உடற்கல்வி வகுப்புகளுக்கான, 'வளநுால்' புத்தகம் வந்தடைந்தது.
தமிழகத்தில்
அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும்
மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான உடற்கல்வி வகுப்புக்கான புத்தகம் முதன்மை கல்வி
அலுவலர் அலுவலகம் அருகே உள்ள, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்
அலுவலகத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் கூறியதாவது:
உடற்கல்வி
வகுப்புகளை தரமான முறையில் நடத்துவதற்காக, வகுப்பு வாரியாக
ஆசிரியர் வள நுால்கள், பாட வழிகாட்டி புத்தகங்கள் வந்துள்ளன.
உடற்பயிற்சி, விளையாட்டு திறன் மேம்பாடு, உடல்நலம், உடற்தகுதி
மதிப்பீடு, மாணவர்களின் வயதுக்கேற்ற பயிற்சி, பாதுகாப்பு
நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும்,
உடற்கல்வி வகுப்பை நடப்பு கல்வியாண்டில் இருந்து
கட்டாயமாக்கப்பட்டு, பள்ளி நிர்வாகங்கள் உடற்கல்வி நேர
அட்டவணையை முறையாக பின்பற்றவும், உடற்கல்வி ஆசிரியர்கள் புதிய
வளநுால்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என
அறிவுறுத்தியுள்ளோம். பள்ளிகளுக்கு தேவையான விளையாட்டு
உபகரணங்கள், மைதான வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
புத்தகங்கள் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
