ADDED : ஜூன் 17, 2025 02:12 AM
அ நிறம் | அளவு
கோபி, பொது வருங்கால வைப்பு நிதியை வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், கோபி நகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டத்தலைவர் ஆண்டாள் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ஜோசப் குரூஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாவட்ட தலைவர் பழனிவேலு, கோட்ட செயலாளர் கருப்புசாமி, வட்ட செயலாளர் கதிரவன், வட்ட பொருளாளர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
