sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குங்கள்'

/

'நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குங்கள்'

'நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குங்கள்'

'நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குங்கள்'


ADDED : செப் 17, 2024 07:29 AM

Google News

ADDED : செப் 17, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: பெருந்துறை யூனியன் காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றிய பகுதியில் அதிகமாக மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. 20ல் காலாண்டு தேர்வு துவங்க உள்ளது.

இந்நிலையில் ஈரோடு - கவுந்தப்பாடி செல்லும் '8-இ, 8-டி' பஸ்கள், நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான் வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன. மூன்று மாதமாக காலை, 11:00 மணி, மதியம், 1:30 மணிக்கு சரியாக வருவதில்லை.

காலாண்டு தேர்வு காலை, மதியம் நடப்பதால், காலை தேர்வு முடித்தவர்கள் வீடு திரும்பு முடியாது. மதியம் தேர்வுக்கு செல்வோர் உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர். தேர்வு காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், அவ்வழியாக இயக்கி நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us