/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வு அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
ஓய்வு அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 25, 2025 01:57 AM
ஓய்வு அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு,: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க, ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், ஈரோட்டில் நடந்தது. தேர்தல் ஆணையர் தண்டபாணி, துணை தேர்தல் ஆணையர் பாலமாணிக்கம் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதிலும் உள்ள கிளை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில் மாவட்ட தலைவராக இ.லியாகத் அலி, மாவட்ட செயலாளர் வ.சித்தையன், மாவட்ட பொருளாளர் அ.ராமநாதன், மாவட்ட துணை தலைவர்கள் சுடலையாண்டி, திருமலைசாமி, சிவசண்முகம் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவர் ரங்கராஜ், அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்.
தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். மத்திய அரசைப்போல் தமிழக அரசும், மூத்த ஓய்வூதியர் ஓய்வூதிய பாதிப்பை நீக்கி, இளையவர்களுக்கு சமமான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

