/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
வருவாய் துறை அலுவலர்களுக்கு அதீத பணி நெருக்கடி அளிப்-பதை தவிர்க்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் உட்பட பல்-வேறு புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, முழு அளவில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதனால் வழக்கமான பணிகளை செய்ய இயலாத நிலை ஏற்படு-கிறது. எனவே அவற்றுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வலியு-றுத்தினர். மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என, 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்-தனர்.