ADDED : பிப் 28, 2026 09:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நான்காவது நாளாக வேலை நிறுத்தத்துடன் காத்-திருப்பு போராட்டத்தை, ஈரோடு தாலுகா அலுவ-லக வளாகத்தில் நேற்றும் தொடர்ந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜய், கவுரி-சங்கர், தமிழரசன், பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பு அளவுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.
