/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'எஸ்.ஐ.ஆரால் பணி நெருக்கடி' வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
'எஸ்.ஐ.ஆரால் பணி நெருக்கடி' வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
'எஸ்.ஐ.ஆரால் பணி நெருக்கடி' வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
'எஸ்.ஐ.ஆரால் பணி நெருக்கடி' வருவாய் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 18, 2025 01:34 AM
ஈரோடு, தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கவுரிசங்கர், மாவட்ட செயலர் விஜயமனோகரன் பேசினர்.
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர்., பணி நெருக்கடியை கைவிட்டு, தேவையான எண்ணிக்கையில் புதிய பணியாளர்களை நியமித்து பணி மேற்கொள்ள வேண்டும். தேதி, நாட்கள் வைத்து நிர்ப்பந்தம், நெருக்கடி செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தினர்.
* நம்பியூர் தாலுகா அலுவலகம் முன், நம்பியூர் வட்டார வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நம்பியூர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிலானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.ஐ.ஆர்., பணிகளை நாளை முதல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.