ADDED : மார் 21, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு வ.உ.சி., பூங்காவின் பின்புறம், பவானி சாலையில் லாரி உரிமையாளர் சங்க பெட்ரோல் பங்க் உள்ளது.
பங்க்கில் டீசல் நிரப்ப, சேலம் மாவட்டத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிய ஒரு லாரி நேற்று வந்தது. பங்க் முன் நிறுத்த டிரைவர் பின்புறமாக இயக்கினார்.அப்போது பாதாள சாக்கடை கழிவு நீர் செல்வ-தற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் இடது சக்-கரம் சிக்கியது. லாரியை பள்ளத்தில் இருந்து முயன்றபோது, பாரம் அதிகமாக இருந்ததால் லாரியின் முன்புறம் துாக்கியவாறு நின்றது. உட-னடியாக லாரியை 'ஆப்' செய்த டிரைவர் இறங்கி விட்டார். லாரி கவிழாமல் இருந்ததால் அரிசி மூட்டை எதுவும் விழவில்லை. மூட்டைகளை எடுத்து சுமையை குறைத்து லாரி மீட்கப்பட்டது.
