/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்
/
பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்
ADDED : பிப் 02, 2024 10:21 AM
ஈரோடு: ஈரோடு, காமராஜர் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஈரோடு, 36வது வார்டுக்குட்பட்ட காமராஜர் வீதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் உள்ளன. மேலும் ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் கழிவுநீர், காரை வாய்க்காலுக்கு செல்லும் வகையில் உள்ளது.
முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி செல்லாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றவும், கால்வாயை சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

