ADDED : மார் 21, 2026 06:26 AM
பவானி; பவானி அருகே ஜம்பை டவுன் பஞ்., நல்லிபா-ளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. குடிநீர் வழங்காததை கண்டித்து, பவானி - அந்-தியூர் சாலையில், பூங்காட்டார் கடை பஸ் நிறுத்த பகுதியில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மறியலை கைவிட்டனர்.
பெண்ணிடம் 6 பவுன் தாலி பறிப்புகோபி: கோபி அருகே பெண்ணிடம், ஆறு பவுன் தாலிக்-கொடியை, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள், 48; கணவர் ஈஸ்வர-மூர்த்தியுடன் பைக்கில், சத்தி சாலையில் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது அவர்-களின் பின்னால் பைக்கில் வந்த இருவர், சுந்த-ரம்மாள் போட்டிருந்த ஆறு பவுன் தாலிக்-கொடியை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து தப்பினர். சுந்தரம்மாள் புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
