ADDED : ஜூன் 18, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர்
அருகே பெரிய குருநாதசுவாமி கோவில் சுற்று வட்டார பகுதியில்,
50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு, 10
நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து
வெள்ளிதிருப்பூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்
பலனில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட
பெண்கள் காலி குடங்களுடன், பெரிய குருநாதசுவாமி கோவில் அருகில்,
நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளிதிருப்பூர்
போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் அங்கமுத்து ஆகியோர், பெண்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை
எடுப்பதாக கூறவே மறியலை கைவிட்டனர். இதனால் அரை மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
