ADDED : மார் 05, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்;நம்பியூர் அருகே கோசனம் ஊராட்சி இந்திரா நகருக்கு சொந்தமான மயானம், கோபி-நம்பியூர் சாலையில் மூணாம்பள்ளியில் உள்ளது.
இந்நிலையில் மயான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், மூணாம்பள்ளியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நம்பியூர் பி.டி.ஓ., வரதராஜ், நம்பியூர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

