/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, வட்டார போக்குவரத்து துறை சார்பில், காங்கேயத்தில் வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. காங்கேயம் அரசு மேல் நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., மாயவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவை சாலை, திருப்பூர் சாலை, பஸ் ஸ்டாண்ட் என நகரின் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் தாராபுரம் சாலையில் நிறைவடைந்தது. போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

