ADDED : ஜன 29, 2026 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தேசிய சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கோபி நெடுஞ்-சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில், சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோபியில் நேற்று நடந்தது.
உதவி கோட்டப்பொறியாளர்கள் சுப்புலட்சுமி, கதிர்வேல், உதவி பொறியாளர்கள் விஜய் கிருஷ்ணா, மணி, விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். தவிர, கோபி ஆர்.டி.ஓ., ேஷக்முகமது, கல்லுாரி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம், விபத்தில்லா சாலை போக்குவரத்து மேற்கொள்வது, சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.

